Saturday, November 27, 2010

ஊழல் கலாச்சாரம்....

                                                           இதுவும் ஒரு கலாச்சாரம்!


இந்தியா - கலாச்சாரத்திலும்,பண்பாட்டிலும் மேலோங்கிய நாடு ஆனால் இன்று மேலைநாட்டு கலாச்சாரத்தினாலும்,உலகமயமாகளினாலும் இழிநிலைக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது.(இது ஓட்ட பந்தயம் அல்ல!)

அறிவியல்தொளில்நுட்ப வளர்ச்சியும்,தொழில்மயமாக்கலும் உலகை சுருங்கச் செய்துவிட்டன.
சுமார் 250 நாடுகள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுவிட்டன.மக்கள் பிரிவுகளாக வாழ்ந்து வந்தவர்கள் இப்பொழுது அணைத்து பிரிவுகளுடன் கலக்கப்பட்டு கலப்பு மனிதர்களாகிவிட்டனர்...இவ்வாறு பல மாற்றங்கள் இருப்பினும் 7 கண்டங்களிலும் 250 நாடுகளிலும் நீக்கமற நிறைந்து இருப்பது ஊழல் மட்டுமே!!

வெளி நாட்டு வங்கிகளில் இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள்,தொழிலதிபர்கள் மற்றும் பிறரின் கருப்பு பணம் சேமிக்கப்பட்டுள்ளது அவற்றின் மதிப்பு ரூ.20 இலட்சம் கோடி ( 40% GDP of India)
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற சில முக்கிய ஊழல்கள்..

* தெஹ்கல்க ஊழல்

* தெல்கி ஊழல்

* ஓட்டுக்கு காசு

* சத்யம் ஊழல்

* மதுகோடா

* காமன்வெல்த்

* கிரிக்கெட்(IPL ) ஊழல்

* பாம்பாயில் வீடு கட்டுவதில் ஊழல்

* கர்நாடக நில ஊழல்

* 2G ஊழல்


* நாட்டில் உள்ள 21 உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணீக்கை - 41 இலட்சம்(மார்ச் 31,2010 -நிலவரப்படி)

* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்னிக்கை-895 ( 285 பணி இடங்கள் காலியாக உள்ளது)

* ஊச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் எண்ணீக்கை - 54,600 (31 நீதிபதிகள்)

* மாவட்ட மற்றும் இதர நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணீக்கை - 2.7 கோடி

இவ்வழக்குகள் எல்லாம் விசாரித்து முடிக்க 340 ஆண்டுகள் தேவைப்படும் என கணக்கிடபட்டுள்ளது.இதனாலயே பல அரசியல்வாதிகள் ஊழல் செய்ய தயங்குவதில்லை மற்றும் நாம் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் சிறிதும் இல்லாமல் போய்விட்டது.வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வருவதற்குள் அவர்கள் இறந்துவிடுகிறார்கள்..

இந்தியா ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் 87-வது இடத்தில தான் உள்ளது.(Transparency International Report-2010 )

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல்..

1. டென்மார்க்

2. நியூ சிலாந்து

3. சிங்கப்பூர்

4. பின்லாந்த்

5. ஸ்வீடன்

6. கனடா

அணைத்து நாடுகளும் ஊழல் அற்ற வளர்ச்சி நோக்கி போய்க்கொண்டு இருக்கும் பொழுது நம் நாடு மட்டும் அழிவை நோக்கி போய் கொண்டு இருக்கிறது...

ஊழல்கள் பெருகுவதற்கு காரணம் ஒரு சில தனி மனிதர்களின் பேராசை தான்.116 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நம் நாட்டில் 70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் 18 வயதிற்கு அதிகமானவர்கள். பல்வேறு வரிகள் பிற நாடுகளை காட்டிலும் குறைவாக வசூளிக்கப்பட்டலும் அவை மக்களுக்கு பயன்படமல் அரசியவாதிகளின் கருப்பு பணமாக மாறிப்போவது தான் இன்றைய இந்தியாவின் அவல நிலை இதில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்சியானாலும் சரி நேற்று வந்த காளான் கட்சியானாலும் சரி அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான் -ஊழல்.

இவர்களால் நேற்று நாட்டின் ஏதோ ஒரு பகுதில் பலர் பாதிக்கப்பட்டனர் இன்று நமக்கு அருகில் பலர் பாதிக்கப்படுகிறார்கள்,நாளை அது நீயாக கூட இருக்கலாம்!!!

விழித்தெழு,வருமுன் காப்பதே அனைத்திலும் சிறந்தது!!!....


உதவியவை:

* http://www.supremecourtofindia.nic.in/

* http://www.transparency.org

* http://en.wikipedia.org

* http://www.theodora.com/wfb/

* http://www.caclubindia.com

* http://india.5thpillar.org/

No comments:

Post a Comment