Friday, January 21, 2011

நல்லவர்கள் அதிகமாக சோதிக்கப்படுவது ஏன் ?

இது எல்லாக் காலங்களிலும் மனிதர்களால் கேட்கப்படுகிற ஒரு கேள்வி. அமெரிக்காவில் "யுனைடெட் டெக்னாலஜி கார்ப்பரேஷன்" என்று ஒரு கம்பெனி. அந்தக் கம்பெனி "வால்ஸ்ட்ரீட்" என்ற பத்திரிக்கைக்கு ஒரு விளம்பரம் கொடுத்திருந்ததாம். நம்ம எழுத்தாளர் சுஜாதாவுக்கு மிகவும் பிடித்த விளம்பரம் அது. அதில் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கிறதா பாருங்கள்! அந்த விளம்பரம்

"உங்களுக்கு எப்போதாவது ஆயாசமாக, அதைரியமாக இருந்தால் இந்த ஆளை யோசித்துப் பாருங்கள். பள்ளிப்படிப்பை பாதியிலே விட்டார். கடை வைத்து எல்லாவற்றையும் இழந்தார். கடன்களை அடைக்க 15 வருடங்கள் ஆனது. கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமில்லாமல் அவஸ்தைப்பட்டார். பல தடவை தேர்தலில் நின்று தோற்றார். அவர் சொற்பொழிவு மட்டும் பிற்பாடு பிரபலமாயிற்று.ஆனால், அப்போது யாரும் அதை கவனிக்கவில்லை. பத்திரிக்கைகளில் அவரைத் தாக்கினார்கள். நாட்டின் பாதி ஜனங்கள் அவரை வெறுத்தார்கள். இத்தனை இருந்தும் உலகமெல்லாம் எத்தனை பேர் இந்த கன்னம் ஒட்டின, கசங்கின மனிதனால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறார்கள் !
அந்த மனிதனின் பெயர் : ஆபிரகாம் லிங்கன் !"

No comments:

Post a Comment