
"காலத்திற்கு ஏற்ப மாறாவிட்டால்,காலம் மாற்றிவிடும்"
மேற்கூறிய கூற்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நாமும்,நம்மைச் சுற்றி உள்ளவையும் மாற்றப்படவேண்டும்(நன்மைக்காக!) ஆனால் நம் நாட்டில் நாட்டு மக்களின் வளர்ச்சி ஒன்றினையே தங்களின் உயிர் மூச்சாக நினைத்து அல்லும் பகலும் அரசியல் தலைவர்கள் அயராது பாடுப்பட்டு வருகின்றனர்..
* இந்திய இரயில்வே 153 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 4-வது மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும்(Railway Network).
* 1 -அமெரிக்கா
* 2 -ரஷ்யா
* 3 -சீனா
இந்திய இரயில்வேயில் தினமும் 2 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்.(ஆண்டுக்கு 730 கோடி மக்கள் பயணிக்கின்றனர்!!!!!!)
ஊழியர்கள்- 16 இலட்சம்
ஆண்டு வருமானம்-88,355 கோடி
நிகர லாபம் -951 கோடி
இந்திய இரயில்வே- வளர்ச்சி
1947-ல் இந்திய சுதந்திரத்தின் போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டன.இன்று 16 மண்டலங்கள் அதற்கு கீழ் 67 பிரிவுகள்(Divisions ) உள்ளன.
இந்தியா சுதந்திரம் அடைந்தபொழுது மொத்த ரயில் பாதையில் 40 % பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது.மீதம் இருந்தவை 53,596 கி.மீ (1951 )அனால் அதற்கு பிறகு போடப்பட்டவை வெறும் 10 ,000 கி.மீ மட்டுமே.
சீனாவில் 1944 இல் இருந்தவை 27 ,000 கி.மீ இன்று 85,000 கி.மீ போடப்பட்டுள்ளன.பிற நாடுகளிலும் இதைப்போல தான் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளன மற்றும் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மின்மயமாக்கப்பட்டவை 31 % மட்டுமே.
விபத்துகள்
ஜனவரி முதல் அக்டோபர் வரை 19 விபத்துகள் நடைப்பெற்றுள்ளன அதில்,
* இறப்புக்கள்-287
* காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள்-439
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிக அதிகம் இதே கால கட்டத்தில் அமெரிக்கா,ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த விபத்துக்களால் உயிர் இழந்தவர்கள் சுமார் 20 முதல் 30 வரை மட்டுமே.
விபத்து ஒரு தனி மனிதனின் தவறால் மட்டுமே நடக்கிறது என்று சொல்வது முட்டாள் தனம் இந்திய இரயில்வேயில் வேலை செய்யும் அனைவரும் இதற்கு பொறுப்பு.
தொடங்கப்பட்ட ஒன்று தன் வழியில் இருந்து பிரிந்து சென்றுக்கொண்டு இருக்கிறது இதற்கு காரணம் ஒவ்வொரு இந்தியனும் தான். தனக்கு நடக்காத வரை எவரும் எதை பற்றியும் கண்டு கொள்வதில்லை இதுவே அனைத்துக்கும் அடிநாதம்...
2020 -இல் வல்லரசு என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கப்போகிறோம் நாம், நம் நிலைமை வளர்ச்சி அடையாதவரை!!!
No comments:
Post a Comment