Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Wednesday, December 15, 2010

சந்தோஷம் இங்கே விற்கப்படும்(இலவசமாக)

"இருப்பதை இருப்பதாக ஏற்றுகொள், இல்லை என்று வாதம் செய்து நேரத்தை வீணடிக்காதே" 
சந்தோஷம்  என்ற ஒற்றைச் சொல்லில் தான் வாழ்கை அடங்கி உள்ளது அனைவரும் அதை  ஒன்றினை மட்டுமே இலக்காக் கொண்டு வாழ்கை பயணத்தில் ஓடிக்கொண்டு இருக்கின்றோம்.பல பேர் வாழ்கை பயணத்தில் பாதியில் விலகி விடுகிறார்கள் சில பேர் மட்டுமே பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்கள் ஆனால் வெற்றி  பெற்றவர்கள் அனைவரும் சந்தோஷம் அடைவதில்லை உண்மையில் சந்தோஷம் வெற்றியில் இல்லை.  

பல நேரங்களில் நாம் செய்வது என்னவென்று நமக்கு தெரிவதில்லை ஏதாவது ஒன்றின் பின்னால் அலைகிறோம் அது கிடைத்த
  சில காலங்களுக்கு பின்பு  அதன் மீது  இருந்த ஆர்வம் குறைந்து விடுகிறது ஆக இந்த பூமயில் படைக்கப்பட்ட அனைத்து பொருள்களும் ஒரு நாளில் வெறுப்பை தரும் இதுவே வாழ்க்கையின் ரகசியம்.

உலகில் நடக்கும் எல்லா விஷயங்களையும் நமது அறிவை கொண்டு ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாது. கேள்வி கேட்பதால் ஞானம்
  வளரும் ஆனால் உண்மை புரியாது. ஒரு பதிலை எல்லா கேள்விக்குள்ளும் உட்படுத்தி விடமுடியாது! அறிவு அவரவர் அனுபவம் சார்ந்த விஷயம்  முட்டாள் என்று உலகில் யாரும் இல்லை அந்த விசயத்தில் அவருக்கு அனுபவம் இல்லை அவ்வளவுதான் அறிவு அனுபவத்தின் தொடர்ச்சியே!!

ஒரு ஜென் கதை இதனை விளக்கும்.தமிழில் மொழிப்பெயர்த்து
  அதனை சிதைக்க விரும்ப வில்லை ஆதலால் ஆங்கிலத்தில் எளிய நடையில் தரப்பட்டுள்ளது. 
 

A very wealthy man asked a Zen master for a text which would always remind him how happy he was with his family. 
The Zen master took some parchment and, in beautiful calligraphy, wrote: The father dies. The son dies. The grandson dies. 

What? said the furious rich man.I asked you for something to inspire me, some teaching which might be respectfully contemplated by future generations, and you give me something as depressing and gloomy as these words? 

Zen Master said,"You asked me for something which would remind you of the happiness of living together with your family. If your son dies first, everyone will be devastated by the pain. If your grandson dies, it would be an unbearable experience. 
However, if your family disappears in the order which I placed on the paper, this is the natural course of life.Thus, although we all endure moments of pain, the generations will continue, and your legacy will be long-lasting."

பிறப்பு முதல் இறப்பு வரை ஏதாவது ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றோம் ஏன் ஓடுகிறோம் என்பது மட்டும் யாருக்கும் தெரிவதில்லை தெரிந்துகொள்வது நம் வேலை அன்று.

சந்தோஷம் வெளியில் எங்கேயும் விற்கப்படுவதில்லை அது உருவாக்கப்படுகிறது அவரவர் அனுபவத்தால்! உன்னுள் சந்தோஷம்
  உருவாக உன்னை நீயே அறிந்து கொள் மனிதனால் படைக்கப்பட்ட எதிலும் தேடாதே!

Friday, December 10, 2010

ஏன்????

ஜாதி, மதம்,இனம்,மொழி,கலாச்சாரம் என எல்லாவற்றையும் கடந்து மக்களை ஒற்றுமைப்படுத்துவது   லஞ்சம் மட்டுமே.இதில் மக்கள் இடையே வேறுபாடுகள் இல்லை,சண்டைகள் இல்லை,சச்சரவுகள் இல்லை ஏன் மனிதமே இல்லை! நாட்டில் லஞ்சம் வாங்காத ஒரு அரசாங்க அதிகாரி இருக்கிறார் என்றால் அவர் நிச்சயம் ஒரு மனிதனாக தான் இருக்க வேண்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது கீழ் தட்டு மக்கள் தான்.தங்களுக்கு கிடைக்கவேண்டியதை பெறுவதற்கே அவர்கள் தினமும் போராட வேண்டி இருக்கிறது.(போராட்டமே வாழ்க்கை இவர்கள் கூற்று!!)

தங்களின் சுய நலத்திற்காகவும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் தங்கள் கடமைகளை  முறையாக செய்வதற்கு மக்களிடம் இருந்து பணத்தை  பெறுகின்றனர் நல்ல விஷயங்களை செய்வதற்கும் கடமைகளை மீறுவதற்கும் பணத்தை பெறுகின்றனர் ஆக பணம் பெறுதல் மட்டுமே  மைய பொருள் ஏன்?எதற்கு?என்பதற்கெல்லாம் விளக்கம் தேவை இல்லை.
லஞ்சம் அதிகமாக உள்ள முதல் 10 இடங்கள்
  1. அரசியல் கட்சிகள்( இவங்க தான் No .1 விட்டு தர மாட்டாங்க!!)
  2. அரசாங்க அதிகாரிகள்/பணியாளர்கள்
  3. நாடாளுமன்றம்  /சட்டமன்றம்
  4. காவல்துறை
  5. தொழில்துறை
  6. மதம் சார்ந்தவை
  7. நீதிமன்றங்கள்
  8. ஊடகங்கள்
  9. கல்வி நிலையங்கள்
  10. அரசு சாரா நிறுவனம் மற்றும் ராணுவம்
நான்கில் ஒருவர் ஏதாவது ஒரு காரணத்திற்காக லஞ்சம் கொடுக்கிறார்.கடந்த 5 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி அதிகரித்து வருகிறது...
உதாரணத்திற்கு  ஒரு அரசுத்துறை பற்றி பார்ப்போம்..
ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற முறையாக ஆகும் செலவு ரூ.1300 (இரண்டு சக்கர வாகனத்திற்கு) ஆனால் "8" போடாமல் எந்த விதிகளையும் தெரிந்து கொள்ளாமல்  ஓட்டுனர் உரிமம் பெற ஆகும் செலவு ரூ.1650 மட்டுமே(நேர்மையின் மதிப்பு ரூ.350 தான்) இதில்   வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு கிடைக்கும் பணம் ரூ.800 சாதரணமாக நாள் ஒன்றுக்கு இவ்வாறு உரிமம் பெரும் நபர்கள் எண்ணிக்கை 15-20 கிடைக்கும் வருமானம் ரூ.12,000-15,000 வரை இதை தவிர்த்து மற்றவற்றில்  கிடைக்கும் வருமானம் ரூ.30,000-40,000 ஆக நாள் ஒன்றுக்கு அவருக்கு கிடைப்பது ரூ.42,000-55,000 இந்தப்பணம் அவரது மாத சம்பளத்தை விட மிகவும் அதிகம்.

இவ்வாறு அவர் பணம் வாங்கிக்கொண்டு செய்யும் ஒவ்வொரு செயல்களினால் பாதிக்கப்படுவது  பொதுமக்கள் தான். வாகனத்தை பார்க்காத ஒருவர் ஓட்டுனர் உரிமம் பெறுகிறார் என்றால் அவர் ஓட்டும் பொழுது நடைபெறும் விபத்துக்கள் கணக்கில் அடங்காது அவர் பாதிக்கப்படுவதோடு அவரால் சாலையில் வாகனம் ஓட்டுபவரும்,நடந்து செல்பவரும் கூட பாதிக்கப்படுகின்றனர். பெரும் விபத்துக்கள்    எல்லாவற்றுக்கும் இது போன்ற செயல்களே முக்கிய காரணம்,அவர் வாங்கும் அந்தப்பணத்தால்  
நன்மை அடைவது அவரது குடும்பம் பாதிக்கப்படுவது நாம் அனைவரும்.

இவ்வாறு ஒவ்வொரு அரசு துறையிலும்  தினம் தினம் லட்சக்கணக்கில்(சில துறையில் கோடிகளில்) லஞ்சப்பணம் பரிமாற்றப்படுகிறது இதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதும் இல்லை கேள்வி கேட்பதும் இல்லை நமக்கு நமது வேலை நடந்தால் சரி,யார் நாசமாக போனால் நமக்கு என்ன?

Tuesday, December 7, 2010

மின்சாரம் தேவை!!!

 மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைகின்றோம் இன்று மனித வாழ்கையே இந்த ஓட்டத்தினால் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது! அறிவியல் கண்டுப்பிடிப்புக்களும் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஜெட் வேகத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறது இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை மின்சாரமே. தேவை அதிகரிக்க அதிகரிக்க மின்சாரத்தின் தேவையும் நேர்விகித்தத்தில் அதிகரிக்கிறது.



இந்தியாவில் 14.40 கோடி குடும்பங்கள் முழுமையாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றன.

நமது நாட்டின் மின்சார உற்பத்தி 1,64,835.80 மெகா வாட்ஸ்.சாதாரண குடும்பம் ஒன்றின் சராசரி தேவை 612 KWH.

மின் ஆதாரங்கள்:
* அனல் மின் நிலையம் (70%)
* நீர் மின் நிலையம்(21 %)
* அணு மின் நிலையம்(4 %)
* காற்று மூலம் (11806 .69 மெகா வாட்ஸ்)
* சூரிய ஒளி மூலம் (18 மெகா வாட்ஸ்)
* இறக்குமதி(பூட்டான்)-739 MU
* பிற புதுப்பிக்ககூடிய வளங்கள்

நிறுவனங்கள்:
1. National Thermal Power Corporation (NTPC)
2. Damodar Valley Corporation (DVC)
3. National Hydroelectric Power Corporation (NHPC)
4. Nuclear Power Corporation of India (NPCI)
5. PowerGrid Corporation of India

இதனுடன் பல மாநில மின்சார வாரியங்கள் இணைந்து நாட்டில் மின் உற்பத்தி செய்கின்றன.

மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது(முதலிடம்-அமெரிக்கா) உலக அளவில் இந்தியாவின் உபயோகம் 3.4%

காற்று மூலம் மின்சாரம் தயாரித்தலில் 5 -வது இடம்
அணு மின் உற்பத்தியில் 4 -வது இடம்
20 அணு மின் நிலையங்கள் உள்ளன அதில் மின் உற்பத்தி 4560 மெகா வாட்ஸ்.
9 அணு மின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

பற்றாக்குறையும்,வீணாக்கமும்:
மின் பற்றாக்குறை ஆண்டுக்கு 3.6% அதிகரித்து வருகிறது.இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு 6 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன அதில் இன்னமும் 89808(15.1 %)கிராமங்கள் முழுமையான மின்சாரம் அடையவில்லை(31.09 .2010 நிலவரப்படி)

சத்தீஸ்கர்,சண்டிகர்,கோவா,மத்தியப் பிரதேசம்,மகாராஷ்டிரா இந்த 5 மாநிலங்கள் மட்டுமே இப்போதைக்கு மின் வெட்டு இல்லாத மாநிலங்கள் பிற அணைத்து பகுதிகளிலும் மின் பற்றாக்குறை உள்ளது.அதிக பற்றாக்குறை உள்ள மாநிலம் பீகார் அதற்கு அடுத்து தமிழ்நாடு.

எதனால் பற்றாக்குறை?
அதிகரித்து வரும் தொழிற்சாலைகள்,அறிவியல் இயந்திரங்கள் அனைத்தும் மின்சாரத்தால் மட்டுமே இயக்கப்படுகின்றன அதற்கு ஏற்ப உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும் உற்பத்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசிடம் தான் உள்ளது.

ஒரு சில தனி மனிதர்களின் சுய நன்மைக்காக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது கடந்த மாதம் மட்டும் 5 நபர் வசிக்கும் ஒரு இந்திய பணக்கார குடும்பம் ரூ.70,69,488 மின் கட்டணம் செலுத்தி உள்ளது(6,37240 Units) இவர்கள் பயன்படுத்திய இந்த மின்சாரத்தை கொண்டு 7000 குடும்பங்களுக்கு மின்சாரம் அளிக்கலாம்.இது போன்ற பல பணம் படைத்த மகான்கள் பல குடும்பங்களை இருளில் தள்ளுகின்றனர்.

தொழிற்சாலைகள் திறக்கப்படும் முன் மின்சார நிலைமைகளை அறிந்து கொண்டு செயல் படவேண்டும்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் சரியான முறையில் பயன்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்,மின் திருட்டை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்,உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தில் வீணாகும் மின்சாரத்தை குறைக்க வேண்டும்.

நாமும் மின்சாரத்தை சிக்கனமாகவும்,தேவைக்கும் மட்டுமே பயன்படுத்தவேண்டும் மாற்றத்தை நம்மில் இருந்து ஆரம்பித்தால் மட்டுமே நம்மை சுற்றி மாற்றம் நிகழும்.தண்டனைகள் கடுமையானால் மட்டுமே தவறுகள் குறையும்(மரணத்திற்கு மட்டுமே மனிதன் அஞ்சுகிறான்!!) தவறு செய்பவர்களும், அதற்கு காரணமானவர்களும்,துணைபுரிபவர்களும் இங்கே இருப்பதால் நாம் என்ன தான் செய்வது?

இன்று தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு நாளை 4 மணி நேரம் மின்வெட்டு அவ்வளவு தான் வேறு ஒன்றும் இல்லை!!!

மின்சாரம் தேவை!!!

Friday, December 3, 2010

சில உண்மைகள்

                           இந்திய இரயில்வே -சில உண்மைகள்.......



                                      


"காலத்திற்கு ஏற்ப மாறாவிட்டால்,காலம் மாற்றிவிடும்"

மேற்கூறிய கூற்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நாமும்,நம்மைச் சுற்றி உள்ளவையும் மாற்றப்படவேண்டும்(நன்மைக்காக!) ஆனால் நம் நாட்டில் நாட்டு மக்களின் வளர்ச்சி ஒன்றினையே தங்களின் உயிர் மூச்சாக நினைத்து அல்லும் பகலும் அரசியல் தலைவர்கள் அயராது பாடுப்பட்டு வருகின்றனர்..

* இந்திய இரயில்வே 153 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 4-வது மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும்(Railway Network).

* 1 -அமெரிக்கா
* 2 -ரஷ்யா
* 3 -சீனா







இந்திய இரயில்வேயில் தினமும் 2 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்.(ஆண்டுக்கு 730 கோடி மக்கள் பயணிக்கின்றனர்!!!!!!)



ஊழியர்கள்- 16 இலட்சம்


ஆண்டு வருமானம்-88,355 கோடி


நிகர லாபம் -951 கோடி

இந்திய இரயில்வே- வளர்ச்சி

1947-ல் இந்திய சுதந்திரத்தின் போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டன.இன்று 16 மண்டலங்கள் அதற்கு கீழ் 67 பிரிவுகள்(Divisions ) உள்ளன.

இந்தியா சுதந்திரம் அடைந்தபொழுது மொத்த ரயில் பாதையில் 40 % பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது.மீதம் இருந்தவை 53,596 கி.மீ (1951 )அனால் அதற்கு பிறகு போடப்பட்டவை வெறும் 10 ,000 கி.மீ மட்டுமே.

சீனாவில் 1944 இல் இருந்தவை 27 ,000 கி.மீ இன்று 85,000 கி.மீ போடப்பட்டுள்ளன.பிற நாடுகளிலும் இதைப்போல தான் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளன மற்றும் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மின்மயமாக்கப்பட்டவை 31 % மட்டுமே.

விபத்துகள்

ஜனவரி முதல் அக்டோபர் வரை 19 விபத்துகள் நடைப்பெற்றுள்ளன அதில்,

* இறப்புக்கள்-287

* காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள்-439

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிக அதிகம் இதே கால கட்டத்தில் அமெரிக்கா,ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த விபத்துக்களால் உயிர் இழந்தவர்கள் சுமார் 20 முதல் 30 வரை மட்டுமே.

விபத்து ஒரு தனி மனிதனின் தவறால் மட்டுமே நடக்கிறது என்று சொல்வது முட்டாள் தனம் இந்திய இரயில்வேயில் வேலை செய்யும் அனைவரும் இதற்கு பொறுப்பு.


தொடங்கப்பட்ட ஒன்று தன் வழியில் இருந்து பிரிந்து சென்றுக்கொண்டு இருக்கிறது இதற்கு காரணம் ஒவ்வொரு இந்தியனும் தான். தனக்கு நடக்காத வரை எவரும் எதை பற்றியும் கண்டு கொள்வதில்லை இதுவே அனைத்துக்கும் அடிநாதம்...

2020 -இல் வல்லரசு என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கப்போகிறோம் நாம், நம் நிலைமை வளர்ச்சி அடையாதவரை!!!