Friday, December 10, 2010

ஏன்????

ஜாதி, மதம்,இனம்,மொழி,கலாச்சாரம் என எல்லாவற்றையும் கடந்து மக்களை ஒற்றுமைப்படுத்துவது   லஞ்சம் மட்டுமே.இதில் மக்கள் இடையே வேறுபாடுகள் இல்லை,சண்டைகள் இல்லை,சச்சரவுகள் இல்லை ஏன் மனிதமே இல்லை! நாட்டில் லஞ்சம் வாங்காத ஒரு அரசாங்க அதிகாரி இருக்கிறார் என்றால் அவர் நிச்சயம் ஒரு மனிதனாக தான் இருக்க வேண்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது கீழ் தட்டு மக்கள் தான்.தங்களுக்கு கிடைக்கவேண்டியதை பெறுவதற்கே அவர்கள் தினமும் போராட வேண்டி இருக்கிறது.(போராட்டமே வாழ்க்கை இவர்கள் கூற்று!!)

தங்களின் சுய நலத்திற்காகவும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் தங்கள் கடமைகளை  முறையாக செய்வதற்கு மக்களிடம் இருந்து பணத்தை  பெறுகின்றனர் நல்ல விஷயங்களை செய்வதற்கும் கடமைகளை மீறுவதற்கும் பணத்தை பெறுகின்றனர் ஆக பணம் பெறுதல் மட்டுமே  மைய பொருள் ஏன்?எதற்கு?என்பதற்கெல்லாம் விளக்கம் தேவை இல்லை.
லஞ்சம் அதிகமாக உள்ள முதல் 10 இடங்கள்
  1. அரசியல் கட்சிகள்( இவங்க தான் No .1 விட்டு தர மாட்டாங்க!!)
  2. அரசாங்க அதிகாரிகள்/பணியாளர்கள்
  3. நாடாளுமன்றம்  /சட்டமன்றம்
  4. காவல்துறை
  5. தொழில்துறை
  6. மதம் சார்ந்தவை
  7. நீதிமன்றங்கள்
  8. ஊடகங்கள்
  9. கல்வி நிலையங்கள்
  10. அரசு சாரா நிறுவனம் மற்றும் ராணுவம்
நான்கில் ஒருவர் ஏதாவது ஒரு காரணத்திற்காக லஞ்சம் கொடுக்கிறார்.கடந்த 5 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி அதிகரித்து வருகிறது...
உதாரணத்திற்கு  ஒரு அரசுத்துறை பற்றி பார்ப்போம்..
ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற முறையாக ஆகும் செலவு ரூ.1300 (இரண்டு சக்கர வாகனத்திற்கு) ஆனால் "8" போடாமல் எந்த விதிகளையும் தெரிந்து கொள்ளாமல்  ஓட்டுனர் உரிமம் பெற ஆகும் செலவு ரூ.1650 மட்டுமே(நேர்மையின் மதிப்பு ரூ.350 தான்) இதில்   வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு கிடைக்கும் பணம் ரூ.800 சாதரணமாக நாள் ஒன்றுக்கு இவ்வாறு உரிமம் பெரும் நபர்கள் எண்ணிக்கை 15-20 கிடைக்கும் வருமானம் ரூ.12,000-15,000 வரை இதை தவிர்த்து மற்றவற்றில்  கிடைக்கும் வருமானம் ரூ.30,000-40,000 ஆக நாள் ஒன்றுக்கு அவருக்கு கிடைப்பது ரூ.42,000-55,000 இந்தப்பணம் அவரது மாத சம்பளத்தை விட மிகவும் அதிகம்.

இவ்வாறு அவர் பணம் வாங்கிக்கொண்டு செய்யும் ஒவ்வொரு செயல்களினால் பாதிக்கப்படுவது  பொதுமக்கள் தான். வாகனத்தை பார்க்காத ஒருவர் ஓட்டுனர் உரிமம் பெறுகிறார் என்றால் அவர் ஓட்டும் பொழுது நடைபெறும் விபத்துக்கள் கணக்கில் அடங்காது அவர் பாதிக்கப்படுவதோடு அவரால் சாலையில் வாகனம் ஓட்டுபவரும்,நடந்து செல்பவரும் கூட பாதிக்கப்படுகின்றனர். பெரும் விபத்துக்கள்    எல்லாவற்றுக்கும் இது போன்ற செயல்களே முக்கிய காரணம்,அவர் வாங்கும் அந்தப்பணத்தால்  
நன்மை அடைவது அவரது குடும்பம் பாதிக்கப்படுவது நாம் அனைவரும்.

இவ்வாறு ஒவ்வொரு அரசு துறையிலும்  தினம் தினம் லட்சக்கணக்கில்(சில துறையில் கோடிகளில்) லஞ்சப்பணம் பரிமாற்றப்படுகிறது இதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதும் இல்லை கேள்வி கேட்பதும் இல்லை நமக்கு நமது வேலை நடந்தால் சரி,யார் நாசமாக போனால் நமக்கு என்ன?

No comments:

Post a Comment