மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைகின்றோம் இன்று மனித வாழ்கையே இந்த ஓட்டத்தினால் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது! அறிவியல் கண்டுப்பிடிப்புக்களும் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஜெட் வேகத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறது இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை மின்சாரமே. தேவை அதிகரிக்க அதிகரிக்க மின்சாரத்தின் தேவையும் நேர்விகித்தத்தில் அதிகரிக்கிறது.
இந்தியாவில் 14.40 கோடி குடும்பங்கள் முழுமையாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றன.
நமது நாட்டின் மின்சார உற்பத்தி 1,64,835.80 மெகா வாட்ஸ்.சாதாரண குடும்பம் ஒன்றின் சராசரி தேவை 612 KWH.
மின் ஆதாரங்கள்:
* அனல் மின் நிலையம் (70%)
* நீர் மின் நிலையம்(21 %)
* அணு மின் நிலையம்(4 %)
* காற்று மூலம் (11806 .69 மெகா வாட்ஸ்)
* சூரிய ஒளி மூலம் (18 மெகா வாட்ஸ்)
* இறக்குமதி(பூட்டான்)-739 MU
* பிற புதுப்பிக்ககூடிய வளங்கள்
நிறுவனங்கள்:
1. National Thermal Power Corporation (NTPC)
2. Damodar Valley Corporation (DVC)
3. National Hydroelectric Power Corporation (NHPC)
4. Nuclear Power Corporation of India (NPCI)
5. PowerGrid Corporation of India
இதனுடன் பல மாநில மின்சார வாரியங்கள் இணைந்து நாட்டில் மின் உற்பத்தி செய்கின்றன.
மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது(முதலிடம்-அமெரிக்கா) உலக அளவில் இந்தியாவின் உபயோகம் 3.4%
காற்று மூலம் மின்சாரம் தயாரித்தலில் 5 -வது இடம்
அணு மின் உற்பத்தியில் 4 -வது இடம்
20 அணு மின் நிலையங்கள் உள்ளன அதில் மின் உற்பத்தி 4560 மெகா வாட்ஸ்.
9 அணு மின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
பற்றாக்குறையும்,வீணாக்கமும்:
மின் பற்றாக்குறை ஆண்டுக்கு 3.6% அதிகரித்து வருகிறது.இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு 6 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன அதில் இன்னமும் 89808(15.1 %)கிராமங்கள் முழுமையான மின்சாரம் அடையவில்லை(31.09 .2010 நிலவரப்படி)
சத்தீஸ்கர்,சண்டிகர்,கோவா,மத்தியப் பிரதேசம்,மகாராஷ்டிரா இந்த 5 மாநிலங்கள் மட்டுமே இப்போதைக்கு மின் வெட்டு இல்லாத மாநிலங்கள் பிற அணைத்து பகுதிகளிலும் மின் பற்றாக்குறை உள்ளது.அதிக பற்றாக்குறை உள்ள மாநிலம் பீகார் அதற்கு அடுத்து தமிழ்நாடு.
எதனால் பற்றாக்குறை?
அதிகரித்து வரும் தொழிற்சாலைகள்,அறிவியல் இயந்திரங்கள் அனைத்தும் மின்சாரத்தால் மட்டுமே இயக்கப்படுகின்றன அதற்கு ஏற்ப உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும் உற்பத்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசிடம் தான் உள்ளது.
ஒரு சில தனி மனிதர்களின் சுய நன்மைக்காக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது கடந்த மாதம் மட்டும் 5 நபர் வசிக்கும் ஒரு இந்திய பணக்கார குடும்பம் ரூ.70,69,488 மின் கட்டணம் செலுத்தி உள்ளது(6,37240 Units) இவர்கள் பயன்படுத்திய இந்த மின்சாரத்தை கொண்டு 7000 குடும்பங்களுக்கு மின்சாரம் அளிக்கலாம்.இது போன்ற பல பணம் படைத்த மகான்கள் பல குடும்பங்களை இருளில் தள்ளுகின்றனர்.
தொழிற்சாலைகள் திறக்கப்படும் முன் மின்சார நிலைமைகளை அறிந்து கொண்டு செயல் படவேண்டும்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் சரியான முறையில் பயன்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்,மின் திருட்டை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்,உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தில் வீணாகும் மின்சாரத்தை குறைக்க வேண்டும்.
நாமும் மின்சாரத்தை சிக்கனமாகவும்,தேவைக்கும் மட்டுமே பயன்படுத்தவேண்டும் மாற்றத்தை நம்மில் இருந்து ஆரம்பித்தால் மட்டுமே நம்மை சுற்றி மாற்றம் நிகழும்.தண்டனைகள் கடுமையானால் மட்டுமே தவறுகள் குறையும்(மரணத்திற்கு மட்டுமே மனிதன் அஞ்சுகிறான்!!) தவறு செய்பவர்களும், அதற்கு காரணமானவர்களும்,துணைபுரிபவர்களும் இங்கே இருப்பதால் நாம் என்ன தான் செய்வது?
இன்று தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு நாளை 4 மணி நேரம் மின்வெட்டு அவ்வளவு தான் வேறு ஒன்றும் இல்லை!!!
மின்சாரம் தேவை!!!
nice so nice...good...
ReplyDelete